×

மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட தனியார் துறைக்கு அமித்ஷா அழைப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் செயல்படும் சிக்‌ஷ்யா அனுசந்தன் அறக்கட்டளை அமைப்பு, புவனேஸ்வரில் பத்து ஏக்கர் பரப்பளவில், 9 அடுக்குமாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை கட்டியுள்ளது. நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில், மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதால் மட்டுமே சுகாதாரத் துறை முற்றிலும் வளர்ச்சி அடைந்து விடாது. மக்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டும் நின்று விடாமல், மருத்துவ  ஆராய்ச்சிகளுக்கும் தனியார் துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இம்மாநில மக்கள் அனைவருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும். அதற்கு பொதுத்துறை முயற்சி மட்டுமல்லாது, இது போன்ற தனியார் மருத்துவமனைகள்  இன்னும் அதிகளவில் திறக்கப்பட வேண்டும்,’’ என்றார்.Tags : Amit Shah , Engage ,medical research,private sector,Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...