×

டெல்லி கலவரத்தில் சேதமடைந்த வீரரின் வீட்டை கட்டி தருகிறது பிஎஸ்எப்

புதுடெல்லி : டெல்லி கலவரத்தில் வீட்டை இழந்த தனது படையை சேர்ந்த வீரருக்கு வீடு கட்டித் தர எல்லைப் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே ராதாபாரியில் எல்லை பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இங்கு, 29 வயதான முகமது அனீஸ் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இவர்  டெல்லிக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு கும்பல்கள் இடையே  வன்முறை வெடித்தது. இதில், வீடுகள், கடைகளுக்கு தீ  வைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 42 பேர் உயிரிழந்தனர். இதில், அனீசின் பெற்றோர் வீடும் சேதமானது. இது பற்றி எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதிகாரிகளுக்கு ெதரிய வந்தது.

பிஎஸ்எப் துணை ஐஜி புஷ்பேந்திர ரதோர் கூறுகையில், ‘‘அனீசின் ெபற்றோரை சந்தித்தோம். அவர்களுக்கு எல்லா உதவிகளும் அளிக்கப்படும். பிஎஸ்எப் நல நிதியில் இருந்து அனீசுக்கு ₹10 லட்சம் வழங்கப்படும். எங்கள் படையின்  பொறியியல் பிரிவு, அனீசின் வீட்டை 14 நாட்களுக்குள் சீரமைத்து தரும்,’’ என்றார்.பிஎஸ்எப் தலைவர் மற்றும் இயக்குனர் ஜெனரல் வி.கே.ஜோரி கூறுகையில், ‘‘வீரரின் திருமணத்துக்கு முன்பாக ஏப்ரலுக்குள் வீடு நல்ல முறையில் கட்டித் தரப்படும். இது, அவருக்கான திருமண பரிசாகும். பிஎஸ்எப் ஒரு குடும்பம் போன்றது.  தேவையின்போது வீரர்களுக்கு உதவும்,’’ என்றார்.



Tags : house ,BSF ,riots ,Delhi ,soldier ,The Player , Damaged ,Delhi riots, player, house, BSF
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...