×

விமான நிலையத்தில் பரபரப்பு ஜெர்மன் பயணியிடம் துப்பாக்கி குண்டு : அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் இருந்து நேற்று இரவு 8.15 மணிக்கு கேரள மாநிலம் கொச்சி செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது, ஜெர்மன் அருகே உள்ள செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெர்கானா  பொலசெக் (53) என்பவர் தனது மனைவி, மகளுடன் கொச்சி செல்ல வந்திருந்தார். அவரது உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில்  உபயோகப்படுத்தக்கூடிய 9 எம்எம் ரக துப்பாக்கிகுண்டு ஒன்று இருந்ததை அதிகாரிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரது பயணத்தை மட்டும் ரத்து செய்தனர். மனைவி, மகள் விருப்பப்பட்டால் பயணிக்கலாம் என்றனர்.

இதனால், பெர்கானா மனைவி, மகளை இதே விமானத்தில் கொச்சிக்கு செல்லும்படியும் இது சின்ன பிரச்னைதான். நான் சீக்கரம் வந்து விடுகிறேன் என்று அனுப்பிவைத்தார். பின்னர் அதிகாரிகள், விமான நிலைய போலீசரிடம் அவரை  ஒப்படைத்தனர்.
விசாரணையில் பெர்கானா, துப்பாக்கி உரிமம் வைத்துள்ளார். அவருடைய துப்பாக்கி குண்டு எதிர்பாராத விதமாக அவரது பையில் வந்துவிட்டது. வாரணாசி விமானத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்று போலீசாரிடம்  கூறினார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள செக் குடியரசு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பெர்கானாவிடம் விசாரிக்கின்றனர்.
Tags : passenger ,airport ,German , Excited,airport, fired gun, Officers shocked
× RELATED பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற...