×

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வீட்டில் கல்வீச்சு: மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை: வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வீட்டில் கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை கே.கே.நகர் 9வது செக்டரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விக்கிரமராஜாவின் மூத்த மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி  மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை விக்கிரமராஜா வீட்டின் மீது திடீரென கற்கள் வீசப்பட்டது. மேலும் கல் வீசியவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கதவுகளை மூடிவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனபால் உள்ளிட்ட 3 பேரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வடபழனியில் நேற்று முன்தினம் இரவு ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா ஓட்டிய திமுக போஸ்டர் மீது அதிமுகவினர் போஸ்டர்  ஒட்டியதால் மோதல் ஏற்பட்டதாகவும். அதைத் தொடர்ந்தே  விக்கிரமராஜா வீட்டில் கல் வீசி எறிந்தது விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விக்கிரமராஜா வீட்டில் கல் வீசப்பட்டது தெரிந்ததும்  வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள்  ஏராளமானோர் கே.கே நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதன் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Wickremarajah ,persons ,Mercantile Association ,home ,President ,Merchant Association , Merchant Association President, Wickremarajah
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...