×

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

மாதவரம்: மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்துச் சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : Chemical Warehouse ,Madhavaram: Firefighters Struggle Roundabout ,Fire: Firefighters Struggle , Monthly, roundabout, chemical warehouse, fire, firefighters, struggle
× RELATED சென்னை அடுத்த செங்குன்றத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீ விபத்து