×

தஞ்சை அரண்மனை சுவரை ஆக்கிரமித்த போஸ்டர்கள்: வரலாற்று பாரம்பரியம் சிதைக்கப்படும் அபாயம்

தஞ்சை: தஞ்சை அரண்மனை சுற்றுச்சுவர் போஸ்டர்களால் ஆக்கிரமித்துள்ளதால் வரலாற்று பாரம்பரியம் சிதைக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். தஞ்சை சோழமாமன்னன் ராஜராஜ சோழன் ஆண்ட மண். கடல் கடந்து கொடி நாட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் தலைநகராக தஞ்சை விளங்கியது. அவரது மறைவுக்கு பிறகு தஞ்சை மராட்டிய மன்னன் சரபோஜியின் வசமானது. அவரது காலத்தில் தஞ்சை அரண்மனை உருவானது.தற்போது அரண்மனை உலக புகழ்பெற்று விளங்குகிறது. இது உலகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. அரண்மனையை சுற்றிலும் 30 அடி உயரத்துக்கு மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அரண்மனை உள்ளே மிக பிரமாண்டமான கட்டிடங்கள், ஆயுத கோபுரம், சரஸ்வதி மகால் நூலகம் வேறு எங்கும் பார்க்க முடியாத பொக்கிஷமாக திகழ்கிறது. அரண்மனையை சுற்றியுள்ள பிரமாண்டமான மதில் சுவர் தற்போது ஆங்காங்கு பூச்சுகள் உதிர்ந்து சிதிலமடைந்து வருகிறது. தஞ்சை கீழவீதி பகுதியில் இருந்து அரண்மனை உள்ளே செல்லும் வரை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சென்று வரும் பகுதியாக திகழ்கிறது.
இப்பகுதியில் சுற்றுச்சுவரில் மூலவைத்திய போஸ்டர் முதல் சினிமா போஸ்டர்கள், அரசியல் கட்சி போஸ்டர்கள், ரசிகர்கள் போஸ்டர்கள், திருமண போஸ்டர்கள் வரை நிரம்பி வழிகிறது.

சுமார் 30 அடி உயர சுவர் போஸ்டர்களால் போர்வையாக போர்த்தப்பட்டுள்ளது. இது தஞ்சை தரணி மக்களை மட்டுமின்றி வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் அரண்மனை சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே சென்றால் அரண்மனை அரசு மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை, சரஸ்வதி மகால் நூலகம், சங்கீத மகால் உட்பட பல்வேறு செயல்பாடுகள் இயங்கி வருகிறது. இத்தகைய சிறப்பம்சங்கள் கொட்டி கிடக்கும் இப்பகுதியில் மன்னர்கள் எழுப்பிய மதில் சுவரை மறைத்து போஸ்டர்கள் ஒட்டியிருப்பது தஞ்சை தரணியின் வரலாற்று பாரம்பரியம் யாராலும் முழுமையாக அறிய இயலாமல் போகிறது.

ஏற்கனவே கலெக்டரா ராதாகிருஷ்ணன் பணியாற்றியபோது இதுபோல் அரசு சுவர்கள், அரண்மனை சுவர்கள், பள்ளி, கல்லூரி சுற்றுச்சுவர்கள், கோயில் சுற்று சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்திருந்தார். அத்துடன் அதைதொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது போஸ்டர்களால் தஞ்சை அரண்மனை சுற்றுசுவர் காணாமல் போகும் அளவுக்கு மறைக்கப்பட்டுள்ளது தஞ்சை மக்களை கவலையடைய செய்துள்ளது. எனவே தஞ்சையின் வரலாற்று பாரம்பரியம் சிதைக்கப்படாமல் உடனடியாக காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆதிகும்பேஸ்வரர் கோயில் சுவரில்  போஸ்டர்கள் கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 10 ஏக்காில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றிலும் உள்ள மதில்சுவா் 30 அடி உயரத்தில் இருக்கிறது. கடந்த மகாமகத்தின்போது பல லட்ச ரூபாய் செலவில் ஆதிகும்பேஸ்வரா் கோயில் மதில்சுவரில் காவிவெள்ளை வர்ணம் பூசப்பட்டு அதில் போஸ்டா–்களை ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பை எழுதியுள்ளனர். ஆனால் ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளாமல் சுவரில் போஸ்டா–்களை ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலா கூறுகையில், மகாமக பெருவிழாவின் முக்கிய கோயிலாக விளங்குவது ஆதிகும்பேஸ்வரா் கோயில்.

இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாசி மகாமகம் நடந்ததால் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலின் வெளியே உள்ள மதில் சுவருக்கு வா்ணம் பூசப்பட்டு விளம்பரம் எழுதக்கூடாது, போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பு எழுதப்பட்டது.
ஆனால் கோயில் சுவர்களில் அதிமுகவை சோ்ந்த நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி வைத்துள்ளனர். இதனால் நான்கு புறங்களில் உள்ள சுவர்களில் போஸ்டா–்களாக காட்சியளிக்கிறது. மாற்று கட்சியினரோ அல்லது வேறு யாராவது போஸ்டர் ஒட்டியிருந்தால் கோயில் நிர்வாகம் உடனடியாக கிழித்து விடும். அதிமுகவை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை ஒட்டியிருப்பதால் கோயில் நிர்வாகத்தினா் அப்புறப்படுத்த அச்சமடைகின்றனர். எனவே கோயில் சுவா்களில் வா்ணம் பூசுவதை விட அதற்காக செலவாகும் தொகையை வைத்து சைவ சமய கலாசாரங்களை பற்றியோ அல்லது சாமிகளின் உருவங்களை வரைந்து வைத்தால் இதுபோன்று போஸ்டர்ளை ஒட்டுவதை தடுக்க முடியும் என்றார்.

* சிறப்பம்சங்கள் கொட்டி கிடக்கும் இப்பகுதியில் மன்னர்கள் எழுப்பிய மதில் சுவரை மறைத்து போஸ்டர்கள் ஒட்டியிருப்பது தஞ்சை தரணியின் வரலாற்று பாரம்பரியம் யாராலும் முழுமையாக அறிய இயலாமல் போகிறது.
* அரண்மனையை சுற்றிலும் 30 அடி உயரத்துக்கு மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அரண்மனை உள்ளே மிக பிரமாண்டமான கட்டிடங்கள், ஆயுத கோபுரம், சரஸ்வதி மகால் நூலகம் வேறு எங்கும் பார்க்க முடியாத பொக்கிஷமாக திகழ்கிறது.


Tags : Tanjore , Posters occupying , Tanjore,risk, distorting , historical heritage
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை