×

திருமூர்த்திமலை நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் பிரபலமானதாக அமராவதிஅணை, திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, முதலைபண்ணை போன்றவை திகழ்கிறது. வார விடுமுறை, அரசு விடுமுறை, பள்ளி கல்லூரி தேர்வு விடுமுறை காலங்களில் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் உடுமலை சுற்றிஉள்ள அணை,அருவிகளை முற்றுகையிடுவது வழக்கம்.தற்போது, கோடை காலம் துவங்கும் முன்பாகவே வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் உள்ளூர்வாசிகள் குளிப்பதற்கு ஆறு, குளம், அணையை நாடி செல்கின்றனர்.

அமராவதி அணையில் போதி அளவு தண்ணீர் இல்லை. மேலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அணைக்கு தண்ணீர் குடிக்க வருவதால் பெரும்பாலோனோர் அமராவதி அணைக்கு செல்வதில்லை. திருமூர்த்தி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பாறைகள் நிறைந்த மலைப்பாதையில் நடந்து சென்று பஞ்சலிங்க அருவியில் குளிக்க விரும்புவதில்லை. இதையடுத்து அணையின் நுழைவாயிலுக்கு முன்பாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர்.

அடுத்த வாரம் உயர் வகுப்பிற்கு பொதுத்தேர்வு துவங்க உள்ளநிலையில், சிறுவர், சிறுமிகளுடன் உள்ளூர்வாசிகள் மற்றும் கேரளா, கர்நாடக போன்ற வெளிமாநில சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் குறைய அவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.பொதுத்தேர்வு முடிந்த பின்னர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிப்பதை தவிர்க்கும் வகையில் அணையை சுற்றிலும் கம்பிவேலி அமைத்துள்ளதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Ananda ,swimming pool ,Thirumurthimalai , Ananda bathing ,hirumurthimalai, swimming pool
× RELATED திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது...