×

வேலூர் மாங்காய் மண்டிக்கு கடப்பாவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு: கோடையில் விலை உயர வாய்ப்பு

வேலூர்: வேலூர் மாங்காய் மண்டிக்கு கடப்பாவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாம்பழம், தர்பூசணி உட்பட பழங்கள் சீசனுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து வேலூர் மங்காய் மண்டிக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 10 டன் வரை சாத்துக்குடி வரத்து இருக்கிறது. இங்கு அதிகளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு பழங்களின் அளவுக்கு ஏற்ப, கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்பனை ெசய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சாத்துக்குடி பழங்களுக்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சீசன் அதிகளவில் இருக்கிறது. ஆனாலும், ஆண்டு முழுவதும் காய்க்கக்கூடியது. அதன்படி, தற்போதும் சாத்துக்குடி வரத்து உள்ளது.  இந்நிலையில், கோடைக்காலத்துக்கு ஏற்ற பழங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சாத்துக்குடி, வரத்து குறைய உள்ளது. இதனால், அடுத்த 2 மாதங்களில் சாத்துக்குடி விலை உயர வாய்ப்புள்ளது. தற்போது கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : Kadapa ,Vellore Mangai Mandi , Vellore Mangai Mandi, Kadapa ,Sathukkudy, Price likely ,summer
× RELATED கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்...