×

முகநூலில் பிரதமருக்கு கொலை மிரட்டல்: கோர்ட் பெண் ஊழியர் மீது வழக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சேலம்:  சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நேற்று முன்தினம், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘முகநூல் பக்கத்தில் பரிமளா என்ற ஐடியில், பிரதமர் மோடிக்கு கொலை  மிரட்டல் விடுத்துள்ளார்’’ எனக் கூறியிருந்தனர். இதுகுறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மிரட்டல் விடுத்த பெண், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பரிமளா என்பதும்,  இவர் சேலம் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.  இதனையடுத்து, நீதிமன்ற பெண் ஊழியர் பரிமளா மீது மற்றவர்களை குற்றம் செய்ய தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் தகவல் பரப்பியதாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Cybercrime police ,court woman employee ,court woman employee Cybercrime cops , Cybercrime cops investigate court woman employee
× RELATED டாக்டரை மிரட்டி ₹22 லட்சம் நூதன மோசடி...