×

நாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதை மத்திய அரசு கைவிடாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்ைக விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  பொதுத்துறை என்பது மத்திய அரசின் சொத்து. மக்களின் சொத்து. அதை அடிமாட்டு விலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆயுள் காப்பீடு என்பது  நீண்டகாலத்திற்கானது என்பதால் மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும்.

 அந்த வகையில் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு சமமாகும். இந்தியாவின் காமதேனுவாக கருதப்படுகிற எல்.ஐ.சி.  நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர். இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாக செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பாஜ அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தை  சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Tags : government ,KS Alagiri ,LIC ,Central , Central government should stop selling of shares of LIC in the face of nationwide agitation: KS Alagiri
× RELATED பாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்