×

வெயில் காலம் தொடங்குவதால் தர்பூசணி பயிரிடுங்கள் மக்களே..! விவசாயத்தில் களமிறங்கிய தோனி

ராஞ்சி: ஐசிசி உலகக் கோப்பை 2019 முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எவ்வித சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை. அவர் எப்போது மீண்டும் களத்துக்கு வருவார் என்று எதிர்த்த நிலையில், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கு அவர் தயாராகி வருகிறார். மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே - ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியைத் தொடங்க உள்ளார். இருப்பினும், தோனியின் முழு கவனமும் ஐபிஎல் 2020ல் உள்ளது. 2020ம் ஆண்டில்  ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய  அணிக்கு மீண்டும் தோனி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில், ‘தல’ தோனி விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தோனி, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், தர்பூசணி விதைகளை விதைத்து நிலத்தை பக்குவப்படுத்துகிறார். மேலும், ‘தர்பூசணி பயிரிடுங்கள்; 20 நாட்களில் பலன் கிடைக்கும்’ என்று தலைப்பிட்டுள்ளார். தோனி சமீபத்தில் மாலத்தீவ் சென்றபோது, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங்கிற்கு ‘பானி பூரி’ தயாரித்து கொடுத்த வீடியோவை பார்க்க முடிந்தது. தற்போது விவசாயத்தை தோனி கையில் எடுத்துள்ளார்.
தோனி கிரிக்கெட் களத்தில் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், அவரது மனைவி சாக்ஷி, தோனியின் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அதில் ஒரு ரசிகர், ‘வெயில் காலம் தொடங்குவதால், தர்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோனி ஆலோசனை கூறியுள்ளார்’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

Tags : Dhoni , Dhoni
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...