×

நாளை இந்தியா - நியூசி. இறுதி டெஸ்ட்: ஆக்ரோஷமாக ஆடினாதான் முடியும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால், ஒரு நாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தொடர்ந்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும்நிலையில், வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

தொடர் தோல்வி கண்ட இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டதால், அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியலில், இந்திய அணியில் மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில், டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். இதுகுறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு மைதானங்களில் ஆக்ரோஷமாக ஆடினால் மட்டுமே இந்திய அணி வெற்றிபெரும். மைதானங்களின் தன்மைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொண்டால்தான் சரியாக ஆடமுடியும்’’ என்றார்.


Tags : India ,Virat Kohli ,New Zealand ,Intruders ,Test , Virat Kohli
× RELATED விராட் கோலி முன்னின்று அணியை...