×

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் !

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யஅனுமதி அளிக்கக் கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.மேலும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம். கொரோனா தொற்றால் பாதித்தவர்களை காப்பாற்றுவதற்கு ஆக்சிஜன் அதிகளவில் தேவைப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடி வருகிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி என்ற காரணத்திற்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கக் கூடாது என வைகோ உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய அனைத்து விஷயங்களையும் நாங்களே முன்வந்து விசாரிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் ! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tushar Mehta ,Central Government ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...