×

டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு : வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வலியுறுத்தல்

டெல்லி : டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் ,வன்முறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்,சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன்முறை பாதித்த பகுதிகளில் அனைத்து மத அமைதி கூட்டங்கள் கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Tags : Delhi ,Republican ,relief camps ,Opposition , Delhi, Violence, Sitaram Yechury, Republican Leader, Opposition, Petition
× RELATED தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்;...