×

கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவிய நிலையில், அமைச்சர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், கால்நடைத் துறை சார்பில் நோய் தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

Tags : Udumalai Radhakrishnan , Minister, Udumalai Radhakrishnan, Poultry, Animal Husbandry, Corona
× RELATED கொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத்...