மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் : அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை  : மராட்டியத்தில் பள்ளி மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து நிரூபர்களிடம் பேசிய அவர், அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. கடந்த அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஐகோர்ட்டின் உத்தரவை விரைவில் சட்ட வடிவில் செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories:

>