×

ஆதரவற்ற பெண் சடலம் நல்லடக்கம்

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு  மருத்துவமனை பிணவறையில் இருந்த அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் உடலை அறக்கட்டளை சார்பில் பெற்று, மீனம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில், ‘‘மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை, மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம் என்ற நோக்கில் இதை செய்து வருகிறோம். ஆதரவற்ற முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து செய்து வருகிறோம்’ என்றனர். இதுபோன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்றால் 8124362370 எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம்,’’ என்றனர்.


Tags : The orphan girl, the corpse, the virtue
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...