×

ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில்கள் பட்டாபிரம் ரயில் நிலையத்தில் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்- மூர்மார்க்கெட் இடையே காலை 3.20 மணிக்கும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே காலை 3.50 மணிக்கும், அரக்கோணம்- வேளச்சேரி இடையே காலை 4 மணிக்கும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே காலை 4.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் மார்ச் 4ம் தேதி பட்டாபிரம் மற்றும் இந்து காலேஜ் ரயில் நிலையத்தில் நிற்காது. சிறப்பு ரயில் இயக்கம்: சென்னை சென்ட்ரல்- சிவமோகா டவுன் இடையே  சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மற்றும் மார்ச் 7,  14, 21, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சென்ட்ரலில் புறப்பட்டு  மறுநாள் காலை 3.55 மணிக்கு சிவமோகா டவுனுக்கு சென்றடையும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Change ,rail service
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...