×

திரும்ப பெற முடியாது மத்திய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால்,  இச்சட்டத்தை எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கும். தூங்கி கொண்டு இருப்பவர்களை மட்டும்தான் எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான்,  வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில்  இருந்து வரும் மதரீதியாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட சிறுபான்மையினருக்கு இந்தியாவில் ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? அனைத்து மத மக்களும் ஒன்றாக, அமைதியாக வாழ்வதுதான்  இந்திய பண்பாட்டின் பெருமை,” என்றார்.
Tags : Union Minister ,withdrawal , withdrawal, Union Minister, assured
× RELATED மாதவிடாய் என்பது அவமானம் அல்ல: மத்திய அமைச்சர் ஸ்மிருதி கருத்து