×

சேலம் அருகே பயங்கரம் கூட்டு பலாத்காரம் செய்து கேரள பெண் படுகொலை: 4 பேரை பிடித்து தீவிர விசாரணை

இளம்பிள்ளை: சேலம் இளம்பிள்ளை அருகே கேரள இளம்பெண் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொலை செய்யபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார்  பிடித்த விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ டிரைவர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஞானசுந்தரம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தைகளுடன்  மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலத்தை மீட்ட மகுடஞ்சாவடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பீனாவிற்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்தது தெரியவே அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில்  அப்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 19, 20 வயது வாலிபர்கள் இந்த கொலையில்  சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் பெண் கொலையான அன்று செல்போன் ஒன்று அங்குள்ள ஏரியில் வீசியது தெரிய வந்துள்ளது.  பிடிபட்ட 3 வாலிபர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கேரள  பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : gang rape ,Salem ,Kerala Salem Kerala ,Terror ,gang-rape case , Terror ,Salem, Kerala, gang-rape,
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி