×

சார்... பா.ஜ. பேரணி நடக்க போகுது... பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு குடுங்க...: கடை உரிமையாளர்கள் போலீசில் மனு

திருப்பூர்: திருப்பூர் பா.ஜ.பேரணியின் போது பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கேட்டு  கடை உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள அனைத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக நேற்று முன்தினம் இரவு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பல ஆண்டுகளாக திருப்பூர் பெரிய கடை வீதியில் பிரியாணி கடைகள் வைத்து நல்ல முறையில் நடத்தி வருகிறோம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று) பாரதிய ஜனதா கட்சியினர் சிடிசி கார்னரில் இருந்து பெரிய கடை வீதி  வழியாக ஊர்வலம் செல்ல இருக்கிறார்கள். அதனால் பேரணி செல்லும் வழியில் இருக்கும் எங்கள் பிரியாணி கடைகளுக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு தருமாறு பெரிய கடை வீதி பிரியாணி கடை சங்கம் சார்பாக  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்கள்.



Tags : Sir ,BJP ,Briyani Anda ,shop owners petition police , BJP ,rally ,going ,security crack ...
× RELATED நிறைய விமர்சனங்களை பார்த்து இருக்கேன் - Adhi speech at PT Sir Success Meet | Dinakaran News.