×

குரூப் 4 தேர்வு முறைகேட்டு வழக்கில் காவலர் சித்தாண்டி உட்பட 4 பேர் மீண்டும் கைது : 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: குரூப் 2ஏ தேர்வு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டி அவரது நண்பர் உட்பட 4 பேரை குரூப் 4 வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் உட்பட 22 நபர்களும், குரூப் 4 தேர்வில் மோசடியாக தேர்வு எழுதிய 20 நபர்களும், விஏஓ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் என மொத்தம் இந்த மூன்று வழக்குகளிலும் 47 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று வழக்குகளையும் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே குரூப் 4 வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, குரூப் 4 தேர்விலும் காவலர் சித்தாண்டி, அவரது நண்பரான காவலர் முத்துகுமார், விமல்குமார், சுதாதேவி ஆகியோர் நேரடியாக தேர்வு எழுதும் நபர்களை சந்தித்து 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஜெயகுமார் மற்றும் ஓம் காந்தன் அளித்த வாக்குமூலத்தின்படி காவலர் சித்தாண்டி, அவரது நண்பர் காவலர் முத்துகுமார், விமல்குமார், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த சுதாதேவி ஆகிய 4 பேரை வழக்கில் சேர்தது ேநற்று அதிரடியாக ைகது செய்தனர். ஏற்கனவே குரூப் 2 ஏ மோசடி வழக்கில் காவலர் சித்தாண்டி, முத்துகுமார், சுதாதேவி, விமல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளனர். இதையடுத்து குரூப் 4 முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது, 4 பேரிடமும் 7 நாள் காவலில் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : guardian ,selection scandal ,Group 4 , Group 4 picks up again, including Guardian chit
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...