×

வில்லுக்குறியில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள் அவதி

திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக மர்ம காய்ச்சல் மற்றும் கண் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களிலும், வர்த்தக நிறுவனங்களின் முன்பும் குப்பைகள் குவித்து வைக்கப்படுகின்றன. இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வில்லுக்குறி-மாந்தோப்பு சாலை, மாடத்தட்டுவிளை - அந்திக்கடை சாலை  மற்றும் சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக மாந்தோப்பு சாலையில் மூட்டை மூட்டையாக கோழி கழிவுகள் மற்றும் கழிவு பொருட்களை சிலர் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் வில்லுக்குறி சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார பணியை முடுக்கி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Archery, health disorder, epidemic
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!