×

உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

பழநி: உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. மண் ஆய்வை பொறுத்து உரமிடுத்தலுக்கான அட்டவணை இருக்க வேண்டும். கார மண்ணிற்கு அமில உரங்களும், அமில மண்ணிற்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவுகளை பொறுத்து உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்கக் கூடாது. உரங்களை 3 முதல் 4 சென்டிமீட்டர் அளவிற்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இட வேண்டும். இதனால் களை வளர்ச்சியினை தடுக்கலாம். மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

உரக்கலவை அட்டவணைப்படி உரங்களை கலக்கி முடிந்த அளவிற்கு அதே உரக்கலவையை இட வேண்டும். கடின மண் வகையில், தழைச்சத்து, உரத்தில் பாதி அளவு அடி உரமாக இட வேண்டும். உரமிட்ட 1 வாரத்திற்குள் அதிகமாகவோ நீர் பாய்ச்சுவதோ அலல்து நீர் தேங்கி இருப்பதோ கூடாது. நீரை வடித்த பிறகு மற்றும் களை எடுத்த பின் மேல் உரமிட வேண்டும். அமில மண்களை சுண்ணாம்பு பொருட்களுடன் தேவைகேற்ப நேர்த்தி செய்ய வேண்டும். வறண்ட நிலங்களில் தழைச்சத்தை இலைவழியாக தெளிப்பதோ அல்லது ஆழமாக இடும்போதோ மேல் உரமாக இட வேண்டும்.

அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை இடும்போது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடவேண்டும். மண் உருண்டைகளில் யூரியாக உள்ள உரங்களை ஆழ்தண்ணீர் பயிர்களுக்கு இட வேண்டும். தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்துதல் முறைகளை செயல்படுத்த வேண்டுமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Enhancing Fertilizer Utilization: Venture Advice , Fertilizer Application, Agriculture, Advice
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...