×

சாணார்பட்டி அருகே பழமை மரங்கள் வெட்டி கடத்தல்: பொதுமக்கள் புகார்

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே தவசிமடையில் அனுமதியின்றி பழமையான மரங்களை வெட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாணார்பட்டி அருகேயுள்ளது தவசிமடை கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிறுமலை அடிவாரத்தில் உள்ள இவ்வூர் பசுமையான பகுதியாகும். இங்கு மா, தென்னை, புளி, வேம்பு, அலம், அரச மரங்கள் அதிகளவில் உள்ளன. பருவமழை காலங்களில் சிறுமலையில் உற்பத்தியாகும் ஆறுகள் தவசிமடை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தை செழிப்படையவும் செய்கின்றன.

இந்நிலையில் அரசு அனுமதி பெறாமல் இப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சிறுமலை ஓடை, சடையன்குளம் பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளிய மரங்களை சிலர் பகல், இரவு பாராமல் வெட்டி கடத்தி வருகின்றனர். இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதால் மழைவளம் குறைந்து இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. மரங்களை நடுவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sanarpatti ,Cutting: Public Conflict , Sanctuary, Creeping Trees, Cutting
× RELATED கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு