×

எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமியின் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல மீனவ சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு : கே.பி.பி.சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஸ்டாலின் பேட்டி

சென்னை : திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமியின் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல மீனவ சமுதாயத்திற்கும் மாபெரும் இழப்பு என்று கே.பி.பி.சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் அப்போது கேபிபி சாமி மகன் பரிசு பிரபாகரனிடம் கே.பி.பி சாமி தம்பி கே.பி. சங்கரின் கைகளை பிடித்து இரங்கல் தெரிவித்தார்.

ஸ்டாலின் பேட்டி

அதன் பின்பு அங்கு இருந்த செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கேபிபி சாமி உடல் நலிவுற்று இருந்தபோது பலமுறை நாங்கள் அவரை நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தோம்.அப்போதெல்லாம் தனது உடல்நலத்தை பற்றி பொருட்படுத்தாமல் இயக்கத்தின்  வளர்ச்சி  திருவொற்றியூர் வளர்ச்சி மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நான் மருத்துவமனையில் அவரை சென்று பார்த்தபோது  என் கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னையே மறந்து நாகூர் அனிபாவின் கழக பாடலை பாடி எங்களை எல்லாம் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார். அவர் நலம் பெற்று திரும்பி வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சூழ்நிலையில்,   இன்று காலை திடீரென அவரது மரண செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

கலைஞர் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார். மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே தலைவர் கலைஞரிடமும் துணை முதல்வர் என்னிடமும்  சுட்டிக்காட்டி அதற்கு உடனடி‌ தீர்வு கண்டார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட சட்டமன்றத்தில்  பல்வேறு கேள்விகளை உடனே கேட்பார். மீனவ சமுதாய நலனுக்காக அவர் பல்வேறு பிரச்சினைகளை அறிந்து அதற்கு தீர்வு பெற்றிருந்தார். அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுகவிற்கு மட்டுமல்ல மீனவ சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். 


Tags : KPP ,MLA ,Sammy ,DMK ,Stalin ,interview ,The Loss ,KPP Sammy ,loss ,Fishermen ,Tribute , DMK, Thiruvottiyur, KPPSamy, Therapy, Karunanidhi, Life, Split, Stalin, Interview
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்