மருத்துவர்களே இல்லாமல் பிணவறை ஊழியர்களே உடற்கூறாய்வு: தருமபுரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லாமல் பிணவறை ஊழியர்கள் உடற்கூறாய்வு செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன ஒருவரின் உடலை ஆட்டு இறச்சியை அறுப்பது போல ஊழியர்கள் இரண்டு பேர் பிணவறையில் அங்குலம் அங்குலமாக கிழித்து உடற்கூறாய்வு செய்கின்றனர். மருத்துவர்கள் யாருமே இல்லாமல் ஊழியர்கள் தனியாக உடற்கூறாய்வு செய்யும் இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தங்களில் வேகமாக பரவி வருகிறது.

விபத்து, கொலை உள்ளிட்ட வழக்குகளில் மருத்துவர்களால் வழங்கப்படும் உடற்கூறாய்வு அறிக்கை மிகவும் முக்கிய சான்றாக உள்ளது. இந்த நிலையில், மருத்துவர்கள் யாரும் இல்லாமல் ஊழியர்களை உடற்கூறாய்வு செய்ய அனுமதித்தது யார் என்பது தெரியாத நிலையில், இச்சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணிச்சுமையால் பாதிக்கப்பட்ட சில மருத்துவமனை ஊழியர்களே இந்த வீடியோவை வெளியிட்டார்களா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

Related Stories: