×

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

ஜகர்தா: இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் மாயமாகியுள்ளனர். இதற்கிடையில், இந்தோனேஷியாவில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா மற்றும் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.


Tags : floods ,landslides ,rains ,Indonesia Five ,Indonesia , Five killed ,floods,landslides ,heavy rains,Indonesia
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி