×

டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென பணியிட மாற்றம்

டெல்லி : டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையில் பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து மத்திய அரசையும், டெல்லி போலீஸையும் சரமாரியாக விமர்சித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜ்ஜியத்தின் பரிந்துரை பேரில் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ள நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த கோரும் அவசர வழக்கை நேற்று நீதிபதி முரளிதர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தலைநகர் டெல்லியில் 1984ம் ஆண்டை போல மீண்டும் ஒரு மத கலவரம் வெடித்துள்ளததால் நீதிபதி கண்டித்தார். கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக முரளிதர் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் மீதான திடீர் பணியிட மாற்ற நடவடிக்கை, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பார் கவுன்சிலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் கடந்த 19ம் தேதி கொலிஜ்ஜியம் பரிந்துரைத்த பட்டியலில் முடிவு செய்யப்பட்ட ஒன்று என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவது தொடர்பான வழக்கை இனி நீதிபதி முரளிதர் விசாரிக்க மாட்டார் என தெரிக்கப்பட்டுள்ளது. . கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஹரிஷ் மாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவை நேற்று நீதிபதி முரளிதர் விசாரித்தார்

Tags : Muralitharan ,Delhi High Court ,judge , Delhi, Riot, High Court, Justice, Muralitharan, Workplace, Transition
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...