ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் : மரியா ஷரபோவா ஓய்வு

மாஸ்கோ: ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா  (32 வயது) டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004ம் ஆண்டு தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்த ஷரபோவா, இது வரை 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். 2016ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து 15 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தடைக் காலம் முடிந்து 2017ல் மீண்டும் களமிறங்கியவர், தோள்பட்டை காயம் உட்பட பல்வேறு காயங்களால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார். இதனால் ஒற்றையர் தரவரிசையில் 373வது இடத்துக்கு பின்தங்கினார். இந்த நிலையில், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

Related Stories: