×

ஐஓசி நிறுவனம் சார்பில் குப்பை அள்ள 7 பேட்டரி வாகனங்கள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டையில் குறுகலான தெருக்களில் குப்பைகளை அள்ளவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஐஓசி நிறுவனம் சார்பில் 7 பேட்டரி வண்டிகள் நேற்று மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. வடசென்னையில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுகலான சாலைகளில் குப்பைகளை அகற்றுவதற்காக மீன்பாடி வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் கொருக்குப்பேட்டை டெர்மினல் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பேட்டரியில் இயங்கக்கூடிய 2 மீன்பாடி ஆட்டோக்களையும், 5 மீன்பாடி சைக்கிள்களையும் குப்பைகளை அகற்றும் பணிக்கு சென்னை மாகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை கொருக்குப்பேட்டை ஐஓசி ெடர்மினல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவன துணை பொதுமேலாளர் ராம்குமார், தங்களது நிறுவனம் சார்பாக 7 வண்டிகளையும் சென்னை மாநகராட்சி 4வது மண்டல தலைமை பொறியாளர் புவனேஸ்வரனிடம் வழங்கினார். இந்த பேட்டரி வண்டிகள் 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 45 கிமீ இயங்கும் வகையில் உள்ளது. இந்த வாகனங்களால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. குறுகலான தெருக்களில்கூட இந்த வாகனங்களை எடுத்து சென்று குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியும். இங்கு வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக இத்தகைய வாகனங்களை அளித்திருக்கிறோம். மேலும், இப்பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். இதுபோன்ற பேட்டரி வாகனங்களை சென்னை மாநகராட்சி முறையாக பராமரித்தால் சுற்றுச்சூழலை வெகுவாக பாதுகாக்கலாம் என ஐஓசி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Corporation ,IOC , IOC company, garbage, corporation
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...