×

புழல் 22வது வார்டில் சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

புழல்: புழல் 22வது வார்டு காவாங்கரை, ஜி.என்.டி சாலையின் சர்வீஸ் சாலையில் நீண்ட காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22வது வார்டான காவாங்கரை, ஜி.என்.டி சாலையின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து நீண்ட காலமாக சர்வீஸ் சாலையில் கழிவுகளுடன் கூடிய நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும் குட்டைபோல் தேங்கியுள்ளது.இதனால் அங்கு அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, அங்குள்ள நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மர்ம காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாய நிலையும் நீடிக்கிறது.

சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது குறித்து வார்டு அலுவலகம், மண்டல அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள சர்வீஸ் சாலையில் கழிவுகளுடன் கூடிய  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அங்குள்ள குடியிருப்பு  பகுதிகளிலும் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு மர்ம காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. சர்வீஸ் சாலையில் நீண்ட காலமாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மண்டல அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை மாநகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து மிக விரைவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர்.



Tags : Ward ,Service Road , Fungus, service road, sewage stagnation, epidemic
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி