×

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் குற்றவியல் வக்கீல்கள்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக மேலும் 2 கூடுதல் குற்றவியல் வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் ஆஜராவதற்காக தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன்  தலைமையில் கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் அய்யப்பராஜ்,  முகமது ரியாஸ் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் வழக்குகள் தேக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு வக்கீல்கள் எம்.ஜோதிகுமார், எஸ்.கார்த்திகேயன் ஆகியோரை கூடுதல் குற்றவியல் வக்கீல்களாக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர்கள் தலைமை குற்றவியல் வக்கீலின் அறிவுரையின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் குற்றவழக்குகளில் ஆஜராவார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிகுமார் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் எம்.பியுமான  நவநீதகிருஷ்ணனின் ஜூனியராகவும், கார்த்திகேயன் மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரனின் ஜூனியராகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Criminal Lawyers ,Madras High Court , Additional ,Criminal Lawyers ,Madras ,High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு