×

முன்னாள் எம்பி ராமசுப்பு நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு

ஆலங்குளம்: முன்னாள் எம்பி ராமசுப்பு நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தற்போது அகில இந்திய காங்கிரஸ் விவசாய அணி துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரி, கிரஷர்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அதிகாரிகள் ஜான், ஜெயராமன் தலைமையில் இந்த சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து கிரஷர், கல்குவாரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம், சொத்து ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8.30 மணி வரை நீடித்தது.

Tags : MBS ,companies ,Ramasuppu Companies , Former, MB, In Ramasuppu , IT Raid
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!