×

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி: 911 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடம்

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்தி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார். இந்திய வீரர்கள் ரஹானே 8, புஜாரா 9, மயங்க் அகர்வால் 10-வது இடத்திலும் உள்ளனர். ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்மித், விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஸ்மித் முதல் இடத்தை பிடித்தார்.

அதன்பின் வங்காளதேசம் அணிக்கெதிராக சதம் அடிக்க மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இதற்கிடையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.  ஸ்மித் 911 புள்ளிகளும், விராட் கோலி 906 புள்ளிகளும் பெற்றுள்ளனர். கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம் (800), டேவிட் வார்னர் (793) ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளனர். ஜோ ரூட் (764) 7-வது இடத்திலும், ரகானே (760) 8-வது இடத்திலும், புஜாரா (757) 9-வது இடத்திலும், மயங்க் அகர்வால் (727) 10-வது இடத்திலும் உள்ளனர்.  இதேபோல் பந்துவீச்சில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு இந்திய வீரர் தான் இடம்பெற்றுள்ளார். 765 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். 904 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.

Tags : Virat Kohli ,India ,Smith ,spot ,ICC Test , ICC, Test rankings, R Indian captain, Virat Kohli, Smith
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...