×

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது; தேர்வுத்துறை

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தேர்வுத்துறை கூறியதாவது: பொதுத்தேர்வில் போது செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு எழுதும் அறைக்கு எடுத்து செல்லக் கூடாது எனவும், விடைத்தாளில் எந்த காரணத்தை கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : elections ,Tamil Nadu ,Tervutturai ,exam center , 10th, 11th, 12th grade general election, sketch, colored pencil, not use, elective
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...