×

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: திருமண வீட்டாரின் குடும்பத்தினர் 24 பேர் உயிரிழந்ததாக தகவல்!

பூண்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுவாமி மாதோபூர் மாவட்டத்தை சேர்ந்த திருமண வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் மாப்பிள்ளையின் நண்பர்கள் என சுமார் 40 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பூண்டி மாவட்டம் பாப்டி கோன் பகுதி அருகே கோட்டா லால்சாட் மெகா நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து மைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல வெளியாகியுள்ளது. அதில், 11 பேர் பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், பேருந்தின் கியர் தோல்வியடைந்தததன் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசோக் கெலாட் இரங்கல்

இந்நிலையில், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பூண்டியில் நடந்த துயர விபத்து பற்றி அறிந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பேருந்து மைஸ் ஆற்றில் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவத்தால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவாக மீட்க விரும்புகிறேன், என்று தெரிவித்துள்ளார்.


Tags : bus crash ,River ,Rajasthan ,Bundi , Rajasthan, bus, accident, death, Bundi
× RELATED ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில்...