சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

வேளச்சேரி: வேளச்சேரியில் 10ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேளச்சேரி, விஜய நகரை சேர்ந்தவர் அஜித் பாஷா (23). தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜித் பாஷா சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர்  வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அஜித் பாஷாவை கைது செய்தனர்.

Related Stories: