×

சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது மரணம் இந்திய வம்சாவளி ஆணழகன் மரணத்தில் மர்மம் இல்லை : விசாரணை அதிகாரி அறிக்கை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது இறந்த இந்திய வீரர் பிரதீப் மரணத்தில் மர்மம் இல்லை என்று தெரியவந்துள்ளது. உலக ஆணழகன் மற்றும் சிங்கப்பூர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரதீப் சுப்பிரமணியன்(31). இவர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிங்கப்பூரில் நடந்த பிரபலங்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது ஸ்டீவன் லிம் (41) என்பவருடன் மோதினார். லிம் விட்ட குத்தில் சரிந்து விழுந்து பிரதீப் சுப்பிரமணியன் இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. பிரதீப் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி கமலா பொன்னம்பலம் நேற்று தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குத்துச்சண்டை நடப்பதற்கு முன்னதாக களத்தில் இருந்த டாக்டர், வீரர் பிரதீப்புக்கு சோதனை நடத்தி தகுதி சான்றளித்தார். அதையடுத்தே பிரதீப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரது உடல்நிலை நன்றாக இருந்துள்ளது. லிம்முடன் நடந்த மோதலின்போது பிரதீப் மூன்று குத்துக்களை எதிர்கொண்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பிரதீப் பின்னர் மெதுவாக எழுந்தார். பின்னர் இரு வீரர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது பதக்கத்தை பெற்றுக்கொண்ட பிரதீப் திடீரென மூலையில் சரிந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அன்றிரவு இரவு 9.51 மணிக்கு இறந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பிரதீப் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது.அவரது சாவில் மர்மம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Indian ,Investigator ,Singapore ,death , Death of Indian boxer ,no mystery , Singapore,Investigator's report
× RELATED சிங்கப்பூரில் இருந்து...