×

உலக லெவனுக்கு எதிராக டி20 ஆசிய லெவனில் கோஹ்லி

தாக்கா: வங்கதேசத்தில் நடைபெற உள்ள ‘பங்காபந்து நூற்றாண்டு விழா’ டி20 போட்டியில் களமிறங்கும் ஆசிய லெவன் அணியில் விராத் கோஹ்லி இடம் பெற்றுள்ளார். வங்கதேச அதிபர் மற்றும் பிரதமராக இருந்த முஜிபுர் ரகுமான் நூற்றாண்டு விழாவையொட்டி ஆசியா லெவன் - உலக லெவன் அணிகள் மோதும் பங்காபந்து டி20 தொடர் (3 போட்டிகள்) அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இரு அணிகளின் வீரர்கள் பட்டியலை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஆசியா லெவன் அணியில் இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோஹ்லி முதல் போட்டியில் மட்டும் விளையாட உள்ளதாகத் தெரிகிறது. மார்ச் மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளதால், பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

உலக லெவன் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கேல் இடம் பெற்றுள்ளார். ‘மேலும் பல வீரர்களுடன் பேசி வருகிறோம். இரு அணிகளிலுமே கடைசி நேர மாற்றங்கள் இருக்கலாம்’ என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் கூறியுள்ளார். ஆசியா லெவன்: விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி, திசாரா பெரேரா, லசித் மலிங்கா, ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், முஸ்டாபிசுர் ரகுமான், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ், சந்தீப் லாமிஷேன், மகமதுல்லா. உலக லெவன்: அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கேல், பேப் டு பிளெஸ்ஸி, நிகோலஸ் பூரன், பிரெண்டன் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ, கெய்ரன் போலார்டு, ஷெல்டன் காட்ரெல், லுங்கி என்ஜிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லநாகன்.

Tags : Kohli ,Levan ,World Levan ,T20 Asian Levan , Kohli ,T20 Asian ELevan , World ELevan
× RELATED அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ