×

ஏர் இந்தியா அதானிக்கு கிடைக்குமா?

புதுடெல்லி: நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை வாங்கும் முயற்சியில் பிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து அதானி குழுமம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு விரும்புவதாக நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை; முறைப்படி விரைவில் தெரிவிக்கும் என்று தெரிகிறது. ‘நாங்கள் வாங்கினால், ஏர் இந்தியாவை புதுப்பித்து லாபமுடையதாக ஆக்குவோம்’ என்று அதானி குழும தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனம் ஏற்கனவே விமான நிலையங்கள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஏலம்  எடுத்து பராமரிப்பில்  ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ல் அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரூ ஆகிய 6 விமான நிலையங்கள் பாராமரிப்பு மற்றும் மேலாண்மையை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Air India , Air India, Adani?
× RELATED மே 25ம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு...