×

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு உட்பட 5 மாவட்டங்களுக்கு டிவிஷன், சப்-டிவிஷன் உருவாக்கம்: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு டிவிஷன், சப்-டிவிஷன் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களை உருவாக்கியது. எனவே, அந்த மாவட்டங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரும் வகையில் கோட்டங்கள், உபகோட்டங்கள் உருவாக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் புதிதாக கோட்டங்கள், உபகோட்டங்கள் உருவாக்க தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்பேரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுடன் புதிய கோட்டங்கள், உபகோட்டங்கள் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு, அதில், கூடுதல் பொறியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Divisions ,Districts ,Government of Tamil Nadu ,Tenkasi ,Chengalpattu ,Sub-Division ,Department of Public Works ,Division , Tenkasi, Chengalpattu, 5 Districts, Division, Sub-Division, Government of Tamil Nadu, Public Works Department, Letter
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5...