‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும்’ என நடிகை, நடன இயக்குநர் சமூகவலைதளத்தில் அவதூறு: நடிகை ஸ்ரீரெட்டி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சென்னை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய கோரி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் துணை நடிகை மற்றும் நடன இயக்குநர் மீது நடிகை ரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கத்தில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தெலுங்கு திரையுலகில் துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைக் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும்  கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

நான் ஆந்திர முதலமைச்சருக்கு ஆதரவளிப்பதால், பிரபல நடிகரின் ஆதரவாளர்களான இருவரும் இதுபோன்ற அவதூறுகளை பரப்புகின்றனர். எனக்கு உள்ள ஆண் நண்பர்கள் குறித்தும்,  அவர்களுடன் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். என் மீது பெட்ரோல் குண்டு வீச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். மேலும் ‘என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்  என சமூக வலைதளத்தில் இருவரும் அவதூறாக பதிவு செய்து பரப்பி வருகின்றனர். எனவே இருவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் அளித்துள்ளார்.

Related Stories: