×

தொடர் வன்முறை காரணமாக டெல்லியில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு

டெல்லி: தொடர் வன்முறை காரணமாக டெல்லியில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜாபராபாத், மாஜிப்பூர், சாந்த்பக்  மற்றும் காரவல் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

Tags : places ,Delhi , Serial violence, Delhi, curfew
× RELATED மத்திய அரசு அவசரமாக அறிவித்த ஊரடங்கு...