×

சிலைக் கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்க : நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில்
சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி மார்ச் 31க்குள் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பிண்ணனி

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான 41 வழக்குகளில் ஆவணங்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மாயமாகின. இந்நிலையில்
சிலைக் கடத்தல் தொடர்பாக 41 வழக்குகளில் ஆவணங்கள் மாயமானதாகக் கூறி, சிலை கடத்தல் வழக்குகளை முடிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆவணங்கள் மாயம் குறித்து கடந்த 2018ம் ஆண்டு மனுதாரர் புகார் அளித்தது பற்றி தற்போது வரை பதில் அளிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 2 ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் ஆவணங்கள் இருந்தன என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போதுதான் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

எனவே அந்த ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ,மார்ச் 31க்குள் தமிழக அரசு உள்துறை செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானதா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : DGP ,Home Secretary , Deportation, Documentary, Illusionist, Home Secretary, DGP, Report
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...