×

ஸ்வீடன் - சீனா இடையேயான உளவு ரகசியத்தை வெளியிட்டதற்காக சீன எழுத்தாளருக்கு 10 ஆண்டு சிறை: சீனா அரசு அறிவிப்பு

சீனா: சீனாவில் பிறந்த ஸ்வீடன் குடிமகனும் எழுத்தாளருமான குவின் மின்ஹைய்க்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை சீனா விதித்துள்ளது. ஸ்வீடன் - சீனா இடையேயான உளவு ரகசியத்தை வெளியிட்டதற்காக எழுத்தாளரான குவின் மின்ஹைய் இத்தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார். ஹாங்காங்கில் இருந்துகொண்டு சீன அரசியலையும், சீன அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தவர்களில் எழுத்தாளர் குவின் மின்ஹையும் ஒருவர் ஆவார்.

கடந்த 2015 ஆம் ஆண்டே சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குவின் மின்ஹைய் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சீனா - ஸ்வீடன் இடையேயான அரசாங்கம் சம்பந்தப்பட்ட உளவு ரகசியங்களை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் சீனாவின் வடமேற்கு நகர நீதிமன்றமான நிங்போ நீதிமன்றம் திங்கட்கிழமை குவின்னை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. குவின் மின்ஹைய் கைது செய்யப்பட்டிருப்பது சீன அரசின் அடக்குமுறைக் கொள்கைகளில் ஒன்று என்று அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Tags : China ,Sweden ,Chinese ,prison , Sweden - China, Between, Spy Secret, Published, Chinese Writer, 10 Year Jail, China
× RELATED பாகிஸ்தானில் நடத்தப்பட்ட...