×

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு: உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க தலைமை நீதிபதியிடம் கோரிக்கை

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க தலைமை நீதிபதியிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 வைரஸ் தொற்று அவ்வப்போது தாக்குதல் நடத்தியது. ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா(H1N1) எனப்படும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக பன்றிக்காய்ச்சல் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்ற அறையில் இன்று இந்த தகவலை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெளியிட்டார்.

அப்போது அவர், 6 நீதிபதிகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை சந்தித்து, வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து, தங்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும்படி உத்தரவிடுமாறு தலைமை நீதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இதுகுறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்திருப்பதாகவும் நீதிபதி சந்திராசூட் கூறியுள்ளார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.  இது தொடர்பான அவசரகால சூழ்நிலைகளை கவனித்துக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Tags : judges ,Supreme Court ,SC Judges , Supreme Court, Judges, Swine Flu, Chief Justice
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...