×

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - மெலானியா டிரம்ப் இணைந்து மரக்கன்று நடவு

டெல்லி : இந்திய பயணத்தின் 2ம் நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க தேசிய கீதம் மற்றும் இந்திய தேசிய கீதம் முழங்க டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட டிரம்பை கைக்குலுக்கி வரவேற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்நிகழ்ச்சியின் போது. பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப்புக்கு அமைச்சரவை சகாக்கள் மற்றும் முப்படைத் தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் டெல்லி ராஜ்காட்டுக்கு சென்ற அதிபர் டிரம்ப், அங்குள்ள காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதிபர் டிரம்புடன் அவரது மனைவி மெலானியாவும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இருவரும் காந்தி நினைவிடத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் தங்களது கருத்தைப் பதிவு செய்து கையெழுத்திட்டனர். மேலும் இருவரும் இணைந்து காந்தி நினைவிட வளாகத்தில் மரக்கன்று நட்டனர். இதையடுத்து டிரம்ப்புக்கு நினைவு பரிசாக காந்தி சிலை வழங்கப்பட்டது. இறையாண்மை கொண்ட வியத்தகு இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Trump ,US ,Melania Trump ,Delhi ,Rajkot ,memorial complex ,Mahatma Gandhi , US President, Donald Trump, President, House, Melania, Gandhi, Woodworking, Planting, President
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷம்...