×

மண்ணடி லாட்ஜில் வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்: இலங்கை வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: பாரிமுனை அடுத்த மண்ணடி பகுதியில் கடத்தல் பொருட்கள் விற்கப்படுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன், ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மண்ணடி பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வாலிபர், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், இலங்கையை சேர்ந்த முஸ்தபா (35) என்பதும், இலங்கையில் இருந்து சிகரெட் பண்டல்களை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரிடமிருந்து ₹20 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முஸ்தபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

Tags : Sri Lankan ,Mannadi Lodge ,Mannady Lodge Foreign , Mannady Lodge, Foreign cigarettes, youth arrested ,seizing goods
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி