×

பிரின்ஸ்ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி பட்டமளிப்பு விழா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை

சென்னை: சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ்ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியின் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வா.விஷ்ணுகார்த்திக், வா.பிரசன்னா வெங்கடேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் மகாலட்சமி, சுந்தர் செல்வின் ஆகியோர் வரவேற்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முருகேசன், தமிழ்நாடு முன்னாள் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் 600  மாணவர்களுக்கு பட்டங்களையும், ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டினர்.

விழாவில் துணை வேந்தர் முருகேசன் பேசுகையில், ‘‘நாட்டின் இன்றியமையாத தேவைகளான இயற்கை விவசாயம், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, எரிசக்தி போன்றவற்றில் நாம் தன்னிறைவு அடைய  தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை நல்க வேண்டும்,’’ என்றார்.இதில் கல்லூரியின் நிர்வாக அதிகரிகள் கே.பார்த்தசாரதி, எ.என்.சிவப்பிரகாசம், எம்.தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Princeree Venkateswara College Graduation Ceremony ,Princeree , Graduation ceremony, Princeree Venkateswara ,College
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...